புதுச்சேரி

ஜிப்மரில் கணைய பித்த நீர் புற்றுநோய்கள் கருத்தரங்கம்

DIN

புதுச்சேரி ஜிப்மர் இரைப்பை குடலியல் துறை சார்பில், கணைய பித்த நீர் புற்று நோய்கள் என்ற தலைப்பில் மருத்துவக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கைத் தொடக்கிவைத்து ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே பேசியதாவது: கணைய பித்த நீர் புற்று நோய்கள் பொதுவாக கணையம், பித்த நாளங்கள், சிறுகுடல் பகுதிகளில் அதிகமாக உருவாகிறது. இவை பொதுவாக நோய் முற்றிய நிலையிலேயே அறியப்படுவதால் நோயாளிகளைக் குணப்படுத்துவது மிகுந்த சவாலாக உள்ளது.
கணைய பித்த நீர் புற்று நோய்களை கண்டறிவது மிகுந்த சிரமமான ஒன்றாகும். பெரும்பாலும் கணைய அழற்சி நோய் பல நேரங்களில் கணைய பித்த நீர் புற்று நோயுடன் ஒத்துபோவதால், புற்று நோய்களை தனித்து அறிய வேண்டியுள்ளது. ஆகையால், இந்த வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பல தரப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு அவசியமாகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள நவீன எண்டோஸ்கோபி முறை மூலம் இந்த வகை நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளிக்க முடிகிறது என்றார் அவர்.
முதல்வர் சுவாமிநாதன், இரைப்பைக் குடலியல் துறைத் தலைவர் அப்துல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை குளோபல் மருத்துவமனை மருத்துவர் ரவி, வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர் ஜார்ஜ் சைமன், ஜிப்மர் மூத்தப் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர். மருத்துவர் பழனிவேல் மோகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT