புதுச்சேரி

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வேலை நேரம் மாற்றம்

தினமணி

புதுச்சேரி நகரில் அரசுப் பள்ளிகளின் உணவு இடைவேளை நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 இது குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 புதுச்சேரி நகரில் உள்ள அரசுப் பள்ளிகள் தினசரி காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.25 வரையும், தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4.15 வரையும் இயங்குகின்றன.
 இந்த நிலையில், உணவு இடைவேளை நேரத்தை 35 நிமிடம் குறைத்து, பள்ளிக் கல்வித் துறை நேரத்தை மாற்றியமைக்க உள்ளது. இதன்படி, பள்ளிகள் காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.25 வரையும், பின்னர் 1.30 மணிக்குத் தொடங்கி மாலை 30 நிமிஷம் முன்னதாக 3.45 மணிக்கும் பள்ளி முடிவடையும்.
 இந்த நேர மாற்றம் அக்டோபர் 3-ஆம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. இதுதொடர்பாக நகரில் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உணவு இடைவேளை நேரத்தில் வெளியில் செல்லும் மாணவர்கள், நெடுந்தொலைவு சென்று விளையாடி வருவது. இணையதள மையங்களுக்குச் செல்வது, படிப்பின் மீதான கவனம் திசை மாறும் வகையில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க, கல்வி அமைச்சரின் ஒப்புதலின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்த நேர மாற்றம் நகர்ப் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT