புதுச்சேரி

தேசிய கலைத் திறன் போட்டி: புதுச்சேரி பள்ளி 3ஆவது இடம்

தினமணி

தேசிய அளவிலான கலைத்திறன் போட்டியில் நாடகப் பிரிவில், புதுவை அமலோற்பவம் பள்ளி 3-ஆவது இடத்தை பிடித்தது.
 பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து "கலா உத்சவ்' என்ற கலைத் திருவிழாவை 2015-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
 இதில் நாடகம், இசை, நடனம், ஓவியம், காண்கலை என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 2016-17-ஆம் ஆண்டுக்கான கலைத்திருவிழாவையொட்டி, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்பட்ட கலைத் திறன் போட்டிகளில் முதலிடம் பிடித்த புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, மத்திய பிரதேசம் போபாலில் ஜன.3 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற கலைத்திருவிழாவில் பங்கேற்றனர்.
 இதில் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 இங்கு நடைபெற்ற போட்டியில் மகிஷாசூரவதம் என்ற தலைப்பில் தர்மத்தை சூது கவ்வும், பின்னர் தர்மமே வெல்லும் என்னும் மையக் கருத்தை கொண்ட தெருக்கூத்தை நடத்தினர்.
 இதில் நாடகப் பிரிவில்
 3-ஆவது இடத்தை பிடித்த இப்பள்ளி மாணவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு, சான்றிதழை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உபேந்திரா குஷ்வாரா வழங்கினார்.
 தேசிய அளவில் மூன்றாவது பரிசை பெற்ற இப்பள்ளி மாணவர்களை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர் குமார், எஸ்.எஸ்.ஏ. இயக்குநர் மொகிந்தர் பால் ஆகியோரும் பாராட்டினர்.
 மேலும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிறுவனர் ச.அ.லூர்துசாமி, பேண்டு வாத்தியங்களுடன் வரவேற்றார். தேசிய போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற பிளஸ் 1 மாணவி திவ்யா, 9-ம் வகுப்பு மாணவிகள் யுவராணி, காவியா, தரணீஸ்வரி, மாணவர்கள் பார்த்தசாரதி, விஷ்ணுபிரசாத், விஷ்வா, முகமது சமீர், கலைச்செல்வன் ஆகியோருக்கு தங்கக்காசு வழங்கி பாராட்டினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT