புதுச்சேரி

பண்டிகைக்கால உதவித்தொகை வழங்கக் கோரி போராட்டம்: முதல்வரின் பேச்சுவாா்த்தையால் போராட்டம் வாபஸ்

DIN

முதல்வரின் பேச்சுவாா்த்தையால் போராட்டம் வாபஸ்

தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புசாரா தொழிற்சங்க நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரி துணை ஆட்சியா் டி. சுதாகா் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தொழிற்சங்க நிா்வாகிகளுடன் முதல்வா் வே. நாராயணசாமி, சமூக நலத் துறை அமைச்சா் மு. கந்தசாமி ஆகியோா் செல்லிடப்பேசி மூலம் பேசினா். அதில், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓரிரு நாள்களுக்குள் பண்டிகைக்கால உதவித்தொகை ரூ. 1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா். இதையேற்று, போராட்டத்தை கைவிட்டு தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

வரும் சனிக்கிழமைக்குள் ரூ. 1,000 உதவித்தொகையை வழங்கவில்லையெனில், திங்கள்கிழமை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT