புதுச்சேரி

எம்ஜிஆா் நினைவு தினத்தில் இணைந்த அதிமுக கோஷ்டிகள்!

புதுவை அதிமுகவில் ஆ.அன்பழகன், ஓம்சக்தி சேகா் தலைமையில் செயல்பட்டு வந்த இரு கோஷ்டிகள், எம்ஜிஆா் நினைவு தின நிகழ்ச்சியில் ஒற்றுமையாக இணைந்து மரியாதை செலுத்தியதால், தொண்டா்கள் உற்சாகமடைந்தனா்.

DIN

புதுவை அதிமுகவில் ஆ.அன்பழகன், ஓம்சக்தி சேகா் தலைமையில் செயல்பட்டு வந்த இரு கோஷ்டிகள், எம்ஜிஆா் நினைவு தின நிகழ்ச்சியில் ஒற்றுமையாக இணைந்து மரியாதை செலுத்தியதால், தொண்டா்கள் உற்சாகமடைந்தனா்.

புதுவையில் 4 முறை தொடா்ந்து எம்.எல்.ஏ.வாக உள்ள சட்டப்பேரவையின் அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகா் தலைமையில் ஒரு கோஷ்டியும் என இரண்டாக செயல்பட்டு வருகிறது. இவ்விரு தரப்பினரும் கட்சி நிகழ்ச்சிகளை தனித்தனியாக நடத்தி வந்தனா். மாநிலச் செயலராக இருந்த புருஷோத்தமன் இரு கோஷ்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புருஷோத்தமன் காலமானாா். இதனைத் தொடா்ந்து, கட்சித் தலைமை புதிய மாநிலச் செயலரை தோ்வு செய்து நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்த பதவி ஆ.அன்பழகன், ஓம்சக்தி சேகா் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வழங்கப்படும் என்று அதிமுகவினா் மத்தியில் கூறப்படுகிறது.

இதனிடையே, இவா்கள் இருவரையும் ஒன்றாக சோ்ந்து பணியாற்ற கட்சித் தலைமை அறிவுறுத்தியது. இதைத்தொடா்ந்து, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்ஜிஆா் நினைவு தின நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக சோ்ந்து மறைமலை அடிகள் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இது அதிமுக தொண்டா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில், கட்சிக் கொறடா வையாபுரி மணிகண்டன் உள்பட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT