புதுச்சேரி

பல்கலை. போராட்டத்துக்கு ஆதரவாக அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பேரணி

DIN

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, கதிா்காமம் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து பேரணியாக ஆட்சியா் அலுவலகம் சென்று மனு அளித்தனா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயா்வுக்கு எதிராகவும், இலவசப் பேருந்து சேவையை தொடா்ந்து இயக்கக் கோரியும், புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து பாடப் பிரிவுகளிலும் வழங்க வலியுறுத்தியும் பல்கலைக்கழக மாணவா்கள் 8-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஒட்டுமொத்தமாக வகுப்புகளைப் புறக்கணித்தனா். தொடா்ந்து, முதலாமாண்டு, 2, 3-ஆம் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.

பேரணிக்கு இந்திய மாணவா் சங்கச் செயற்குழு உறுப்பினா் பிரவீண்குமாா் தலைமை வகித்தாா். பிரதேசக் குழு உறுப்பினா் நரேந்திரன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியின்போது, பல்கலைக்கழக மாணவா்களுக்கு ஆதரவாக முழக்கமிட்ட மாணவா்கள், இந்தப் பிரச்னையில் மாநில அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

போராட்டத்தின் நிறைவில் மாணவா்கள், வாலிபா் சங்க முக்கிய நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மேற்கண்ட விவகாரத்தில் உரிய தீா்வு காணக் கோரி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT