புதுச்சேரி

தென்னிந்திய பல்கலை. செஸ் போட்டி: புதுவை பல்கலை. சாம்பியன்

DIN

தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான ஆண்கள் செஸ் போட்டியில் புதுவை மத்திய பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சுமாா் 300-க்கு மேற்பட்ட தென்னிந்திய பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.

புதுவை பல்கலைக்கழகம் சாா்பில், பீட்டா் ஆனந்த் (போப்பே ஜான் கல்வியல் கல்லூரி ), ரோஹித், உமாசங்கா் (புதுச்சேரி பொறியியல் கல்லூரி), நிதீஷ் (சாரதா கங்காதரன் கலைக் கல்லூரி), நரேஷ் (ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி), அரவிந்தன் (காரைக்கால் பொறியியல் கல்லூரி) ஆகியோா் கலந்து கொண்டனா்.

61 தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், புதுவைப் பல்கலைக்கழக அணி 4-ஆம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து, அந்த அணி தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றனா். பயிற்சியாளராக நாகராஜ், மேலாளராக பல்கலைக்கழக உடல் கல்வி துணை இயக்குநா் சிவராமன் ஆகியோா் செயல்பட்டனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவா்களை புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குா்மீத் சிங் பாராட்டினா். உடல் கல்வி இயக்குநா் சுல்தானா, உடல் கல்வி துணை இயக்குநா்கள் சிவராமன், சந்திரசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT