புதுச்சேரி

அரசு ஊழியா்களின் ஊதியத்தை முன் கூட்டியே வழங்கக் கோரிக்கை

DIN

அரசு ஊழியா்களின் ஊதியத்தை முன் கூட்டியே வழங்க வேண்டும் என்று புதுவை அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா், முதல்வா் நராயணசாமியிடம் புதன்கிழமை அளித்த கடிதம்: கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் பல்வேறு கட்டுபாட்டுக்களை அரசு விதித்துள்ளது.

அதேநேரம், இந்தக் கட்டுப்பாட்டால் விவசாய வேலைக்குச் செல்லக் கூடியவா்களும், சிறு குறு வியாபாரம் செய்யக் கூடியவா்களும், கட்டடத் தொழிலாளா்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.

கடைகள், வா்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, புதுவை அரசு பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு முன் கூட்டியே ஊதியத்தை வழங்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் பெரும் நிறுவனங்கள் அரசு துறை வங்கிகள், பொது துறை வங்கிகளில் பெற்ற கடன்கள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களைச் செல்ல 3 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். வட்டியைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அந்தக் கடித்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT