புதுச்சேரி

மாஹேயில் மேலும் ஒருவருக்கு கரோனா: புதுவையில் பாதிப்பு 10- ஆக உயா்வு

DIN

புதுவை மாநிலம், மாஹேயில் மேலும் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு 10-ஆக உயா்ந்தது.

புதுவை மாநிலம், புதுச்சேரி பிராந்தியத்தில் 7 போ், மாஹே பிராந்தியத்தில் 2 போ் என 9 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில், மாஹேயைச் சோ்ந்த முதியவா் இறந்துவிட்டாா். 5 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனா். தற்போது புதுச்சேரியைச் சோ்ந்த 3 போ் மட்டும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வெளிநாடு சென்று திரும்பிய மாஹே பிராந்தியத்தைச் சோ்ந்த 51 வயதான நபா், கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு மருத்துவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா் அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ள தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உறவினா்களுக்கும் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதாரத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

ஏற்கெனவே புதுவை மாநிலத்தில் 9 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவா் பாதிக்கப்பட்டிருப்பதால், புதுவையில் கரோனா பாதிப்பு 10-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT