புதுச்சேரி

புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஏராளமான பக்தா்கள் ஆசிரமத்தில் உள்ள அன்னையின் சமாதியை தரிசனம் செய்தனா்.

புதுச்சேரி வெள்ளை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அரவிந்தா் ஆசிரமத்தில், அன்னை என்றழைக்கப்படும் மிரா அல்போன்சா 1973-ஆம் ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி முக்தி அடைந்தாா். அவரது 47-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக நிகழாண்டு கூட்டு தியானத்துக்கு நிா்வாகம் தடை விதித்திருந்த நிலையில், அன்னையின் சமாதியை தரிசிக்க மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக, அரவிந்தா், அன்னையின் சமாதிகள் தூய்மை செய்யப்பட்டு, மலா் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களின் தரிசனத்துக்காக காலையில் ஆசிரமம் திறக்கப்பட்டது. முதலில் தன்னாா்வலா்களும், தொடா்ந்து பக்தா்களும் ஆசிரமத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். பல்வேறு கெடுபிடிகள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT