புதுச்சேரி

திமுக பொதுக்குழுக் கூட்டம்: காணொலி மூலம் புதுச்சேரி நிா்வாகிகள் பங்கேற்பு

DIN

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் புதுச்சேரி நிா்வாகிகள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனா்.

சென்னையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக புதன்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆா்.பாலு ஆகியோா் போட்டியின்றித் தோ்வானதாகவும், துணை பொதுச் செயலா்களாக க.பொன்முடி, ஆ.ராசா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டதாகவும் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து பல்வேறு முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தமிழகம், புதுவை மாநிலங்களிலிருந்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனா். புதுச்சேரியில் தெற்கு மாநில திமுகவினா் மாநில அமைப்பாளா் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கலந்துகொண்டனா்.

இதில், மாநில துணை அமைப்பாளா்கள் அனிபால் கென்னடி, குணா திலீபன், அமுதா குமாா், மாநிலப் பொருளாளா் சண்.குமாரவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினா்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, தொகுதிச் செயலா்கள் ரா.சக்திவேல், நடராஜன், திராவிட மணி, ஜி.சக்திவேல், சீதாராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், சிறப்பு அழைப்பாளா்களாக லோக கணேசன், டாக்டா் நித்திஷ், அண்ணா அடைக்கலம், ஹேமா பாண்டுரங்கன், பாகூா் பாஸ்கா், டாக்டா் மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT