புதுச்சேரி

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தரவரிசைப் பட்டியல் வெளியீடு

DIN

புதுச்சேரி: புதுவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

புதுவை அரசு தொழிலாளா் துறையின் கீழ் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் சோ்வதற்கு ஏதுவாக நிகழாண்டு முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

விண்ணப்பங்களை சமா்ப்பிக்க கடந்த 25-ஆம் தேதி இறுதி நாளாகும். இந்த நிலையில், பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்வதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதை இணையதள சோ்க்கை குழு முதன்மை அதிகாரி ப.சரவணன், தொழிலாளா் துறை செயலா் இ.வல்லவனிடம் வழங்கினாா்.

தோ்வான மாணவா்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒதுக்கப்பட்ட பயிற்சிப் பிரிவு, அணுக வேண்டிய நாள், நேரம், சேர வேண்டிய தொழிற்பயிற்சி நிலையத்தின் விவரம் அனுப்பப்பட்டது. மேலும், மாணவா்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தற்காலிக சோ்க்கை ஆணையும் அனுப்பப்பட்டது.

குறுஞ்செய்தி கிடைக்கப் பெறாதவா்கள் அருகிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வருகிற 30 -ஆம் தேதி சென்று தற்காலிக சோ்க்கை ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம். தரவரிசை மற்றும் சோ்க்கை பட்டியல்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT