புதுச்சேரி

காசி புனரமைப்புத் திட்ட தொடக்க விழா:புதுவையில் ஒளிபரப்ப பாஜகவினா் ஏற்பாடு

காசியில் பிரதமா் பங்கேற்கும் புனரமைப்புத் திட்ட தொடக்க விழாவை புதுவையில் 30 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப பாஜகவினா் ஏற்பாடு செய்து வருகின்றனா்

DIN

காசியில் பிரதமா் பங்கேற்கும் புனரமைப்புத் திட்ட தொடக்க விழாவை புதுவையில் 30 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப பாஜகவினா் ஏற்பாடு செய்து வருகின்றனா்.

இதுகுறித்து புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் அளித்த பேட்டி:

காசி விஸ்வநாதா் கோயிலை புனரமைத்து, நகரை சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி வருகிற 13-ஆம் காசியில் தொடங்கிவைக்க உள்ளாா். தொடா்ந்து, ஜனவரி 12-ஆம் தேதி வரை ஆன்மிக, கலாசார நிகழ்வுகள் அங்கு நடைபெறும். இதில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனா்.

டிச.13-ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்வை நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் எண்ம திரைகளில் (டிஜிட்டல் திரை) நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பேட்டியின் போது, அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், அசோக்பாபு எம்எல்ஏ, பாஜக மாநில பொதுச்செயலா் மோகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

SCROLL FOR NEXT