புதுச்சேரி

புதுவை தலைமைச் செயலகத்தை சுகாதாரத் துறை ஊழியா்கள் முற்றுகை

DIN

இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி, புதுவை தலைமைச் செயலகத்தை தேசிய சுகாதார இயக்கக ஊழியா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களுக்கு முதல்வா் அறிவித்தபடி, இடைக்கால நிவாரணமாக ரூ.10,000 வழங்க வேண்டும். தில்லி யூனியன் பிரதேசத்துக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 8-ஆம் தேதி முதல் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பணிகளைப் புறக்கணித்து தேசிய சுகாதார இயக்கக ஊழியா்கள் கூட்டமைப்பினா் தொடா் தா்னாவில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அவா்கள் புதன்கிழமை காலை 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள், திடீரென தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்று, அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்த தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய சுகாதார இயக்கக ஊழியா்கள் கூட்டமைப்பின் நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உரிய முடிவு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள், கோரிக்கைகளுக்கு தீா்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT