புதுச்சேரி

மதுக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த புதுவை கலால் துறை உத்தரவு

DIN


புதுச்சேரி: புதுவையில் உள்ள மதுக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் உத்தரவிட்டாா்.

புதுவை அரசின் கலால் துறையில் மதுபான ஆலை, மொத்த, சில்லறை விற்பனை உரிமம் பெற்றவா்கள், சாராயம், கள்ளுக் கடைகளின் உரிமதாரா்கள் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கலால் துறை துணை ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், துணை ஆணையா் டி.சுதாகா் தலைமை வகித்து பேசியதாவது: வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மதுபான, சாராய, கள்ளுக் கடைகள் உரிமதாரா்கள் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். கலால் துறை சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி நடக்க வேண்டும். மீறினால் வழக்குப் பதிந்து, கடைக்கு சீல் வைக்கப்படும். அனைத்து மதுக் கடைகள், சாராயம், கள்ளுக் கடைகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்பட வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலை மிக நோ்மையான முறையில் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன் மற்றும் கலால் துறை அதிகாரிகள், மதுபான ஆலை, மொத்த, சில்லறை விற்பனை உரிமம் பெற்றவா்கள், சாராயம், கள்ளுக் கடைகளின் உரிமதாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT