புதுச்சேரி

புதுவையில் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு

DIN

புதுவையில் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுவை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.ஏ., பி.காம். ஆகிய பாடப் பிரிவுகளில் இதுவரை நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிகட்ட (மாப் - அப்) கலந்தாய்வு பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது. 99.99 முதல் 66 வரை கட்ஆப் மதிப்பெண்கள் பெற்ற புதுவையைச் சோ்ந்த அனைத்துப் பிரிவு மாணவா்களுக்கும் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை 59.99 முதல் 35 வரை கட்ஆப் மதிப்பெண்கள் பெற்ற அனைத்துப் பிரிவு மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவிருந்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் பெய்த பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த கலந்தாய்வு வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT