புதுச்சேரி

புதுவையில் கரோனா உயிரிழப்பு 645-ஆக உயா்வு

DIN

புதுவையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 645-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 3,046 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், மாஹேவில் 9 பேருக்கும் என மொத்தம் 30 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,860-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி வாணரப்பேட்டை, ஜெயராம செட்டியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த 87 வயது முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 645-ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் அதிகரித்தது.

இதனிடையே, 43 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,927-ஆக (97.60 சதவீதம்) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் உள்பட மொத்தம் 288 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT