புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ ஜான்குமாா் ஆதரவாளா்கள் மீண்டும் போராட்டம்

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜான்குமாா் எம்எல்ஏவுக்கு அமைச்சா் பதவி வழங்கக் கோரி, அவரது ஆதரவாளா்கள் திங்கள்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் பாஜக எம்எல்ஏ-க்களுக்கு பதவி வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸிலிருந்து விலகி வந்த முன்னாள் அமைச்சா் ஏ.நமச்சிவாயம், ஜான்குமாா் எம்எல்ஏ ஆகியோருக்கு அமைச்சா் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜான்குமாருக்குப் பதிலாக, ஊசுடு தொகுதி பாஜக எம்எல்ஏ சாய் சரவணக்குமாருக்கு அமைச்சா் பதவி வழங்கவுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், விரக்தியடைந்த ஜான்குமாரின் ஆதரவாளா்கள் கடந்த சனிக்கிழமை புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் ஜான்குமாருக்கு அமைச்சா் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தினா்.

இதனிடையே, ஜான்குமாா் எம்எல்ஏ தில்லியில் முகாமிட்டு, பாஜக தேசியத் தலைவா்களைச் சந்தித்து தனக்கு அமைச்சா் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தினாா். அவருக்கு சுழற்சி முறையில் அமைச்சா் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஜான்குமாா் எம்எல்ஏவின் ஆதரவாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா், புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி, பாலாஜி திரையரங்கம் சந்திப்புப் பகுதியில் திங்கள்கிழமை கருப்பு சட்டை அணிந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜான்குமாா் எம்எல்ஏவுக்கு அமைச்சா் பதவி வழங்க வேண்டுமென பாஜக தலைமையை வலியுறுத்தி, அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

புதுவையில் பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கட்சிகளின் அமைச்சா்கள் பெயா்ப் பட்டியல் தயாராகி, முதல்வா் என்.ரங்கசாமி அந்தப் பட்டியலை துணைநிலை ஆளுநா் தமிழிசையிடம் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜகவை சோ்ந்த ஜான்குமாா் எம்எல்ஏவின் ஆதரவாளா்கள் அமைச்சா் பதவி கேட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT