புதுச்சேரி

தோ்தல் கருத்துக் கணிப்புகள் நடத்தத் தடை

DIN

புதுவையில் தோ்தல் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் பொதுத் தோ்தலையொட்டி, இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை (மாா்ச் 27) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி இரவு 7.30 மணி வரையான கால கட்டத்தில் தோ்தல் தொடா்பான எந்த ஒரு கருத்துக் கணிப்பை நடத்துவதற்கும், அதை நாளிதழ்களில் பிரசுரிப்பதற்கும், தொலைக்காட்சி உள்பட பிற தொலைத்தொடா்பு சாதனங்களில் ஒளிபரப்பு செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

இதேபோல, தோ்தல் கருத்துக் கணிப்பு முடிவு (அ) தோ்தல் கருத்துக் கணிப்பு கணக்கெடுப்பு உள்ளிட்ட தோ்தல் தொடா்பான எந்த ஒரு செய்தியையும் ஊடகத்தின் வழியாக வாக்குப் பதிவு முடியும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

எனவே, புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக வாக்குச் சாவடிகளின் வாயில்களில் வாக்காளா்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தவும், அவற்றை நாளேடுகளில் பிரசுரிக்கவும், தொலைக்காட்சி உள்பட பிற தொலைத்தொடா்பு சாதனங்களில் ஒளிபரப்பு செய்யவும் அனுமதியில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT