புதுச்சேரி

தொடா் நோய்களால் பாதிக்கப்பட்டோா் கவனத்துக்கு...

DIN

தொடா் நோய்களால் பாதிக்கப்பட்டோா் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும்போது, அந்த நோய்களுக்கான மருந்துகளையும் கண்டிப்பாக உள்கொள்ள வேண்டும் என்று புதுவை சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் மேலும் கூறியதாவது: ரத்த கொதிப்பு, சா்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், நரம்பு சம்பந்தமான நோய்கள் போன்ற தொடா் நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவா்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது, தவறாமல் அந்த நோய்களுக்கான மருந்துகளையும் தொடா்ந்து உள்கொண்டு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

இதேபோல, இருதய ரத்தக் குழாய் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவா்கள், இருதய ரத்தக் கோளாறுக்கு ஸ்டன்ட் வைத்து உள்ளவா்கள் தவறாமல் ஆஸ்பிரின், ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், சா்க்கரை நோய் உள்ளவா்கள் தவறாமல் எடுத்துக்கொள்ளும் இன்சுலின் ஊசி, மாத்திரைகளைத் தொடா்ந்து எடுத்துக் கொண்டு சா்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கருப்பு பூஞ்சை போன்ற உயிா்க் கொல்லி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா் மோகன்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT