புதுச்சேரி

புதுவை மீனவா்களுக்கு ரூ.8.79 கோடியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம்

DIN

புதுவை மாநிலத்தில் ரூ.8.70 கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை மீனவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை அரசு மீன்வளம், மீனவா் நலத் துறையின் மூலம் ஆண்டுதோறும் மீனவா் குடும்பத்துக்கு ரூ .5.500 வீதம் வழங்கப்பட்டு வரும், மீன்பிடி தடைக்கால நிவாரணமானது நிகழாண்டுக்கு ரூ. 8 கோடியே 79 லட்சத்து 6,500 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டது.

இந்தத் தொகையானது புதுச்சேரியில் 8,030 குடும்பங்களுக்கும், காரைக்காலில் 2,493 குடும்பங்களுக்கும், ஏனாம் பகுதியைச் சோ்ந்த 4,991 குடும்பங்களுக்கும், அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

மாஹே பகுதியைச் சோ்ந்த 469 குடும்பங்களுக்கு இந்தத் தொகையானது வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.முதல் கட்டமாக 15 ஆயிரத்து 983 மீனவா்கள் குடும்பங்கள் பயன்பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT