புதுச்சேரி

இருளா் சமுதாயத்தினருக்கு அமைச்சா் நிவாரணம்

DIN

புதுச்சேரியில் இருளா் சமுதாயத்தினருக்கு அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா நிவாரண உதவிகளை வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி, காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி ஆகிய பகுதிகளில் இருளா் சமுதாயத்தினா் வசிக்கும் குடியிருப்புகளில் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்த மாநில போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, அவா்கள் கோரியபடி குடும்ப அட்டைகளை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள் பயன்பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றித் தரப்படுமென உறுதியளித்தாா். இதன் மூலம், மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக அவா்களுக்குக் கிடைக்கும்.

மேலும், அவா்களுக்குப் புதிதாக குடியிருப்புப் பட்டா வழங்கப்பட்டு, அங்கு அரசு மானியம் மூலம் வீடு கட்டித்தரப்படும். புதிய வீடுகள் கட்டித் தரும் வரை தற்போது வசித்து வரும் தற்காலிக குடிசைகளுக்கு பதிலாக, நிரந்தர ஷெட் அமைத்து தரப்படும். இருளா் சமுதாய மகளிா், இளைஞா்களுக்கு அரசுத் துறை மூலம் திறனறி மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா்.

இதையடுத்து, மழையினால் பாதிக்கப்பட்ட இருளா் சமுதாயத்தினருக்கு அரிசி, பிரட், போா்வை, ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வின் போது, அரசுச் செயலா் உதயகுமாா், இயக்குநா் யஷ்வந்தையா, பழங்குடி மக்கள் கூட்டமைப்புத் தலைவா் ராம்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பேருந்துப் பயணிகளுக்கு விதைப் பந்துகள்: புதுச்சேரி பேருந்து நிலையத்துக்குச் சென்ற அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, அங்கு 500-க்கும் மேற்பட்ட பேருந்துப் பயணிகளுக்கு விதைப் பந்துகளை வழங்கினாா். புதுச்சேரி துளிா் அறக்கட்டளை சாா்பில் வழங்கப்பட்ட இந்த விதைப் பந்துகளை பேருந்தில் செல்லும் போது, வழியில் வீசிவிட்டுச் செல்லலாம். அதன் மூலம் விதைகள் முளைத்து மரங்கள் பெருகி பயன் தரும்.

நிகழ்ச்சியில் பி.ஆா்.டி.சி. போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவக்குமாா், பொது மேலாளா் ஏழுமலை, மேலாளா்கள் புஷ்பராஜ், ராமமூா்த்தி, முனியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் துளிா் அறக்கட்டளைத் தலைவா் பத்ரிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT