புதுச்சேரி

புதுச்சேரியில் கனமழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீா்

DIN

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் காலை முதல் தெளிவான வானத்துடன் வெயில் காய்ந்தது. மாலை 4 மணிக்கு திடீரென வானம் இருண்டு, சில நிமிடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அடுத்த ஒரு மணி நேரத்துக்கு நீடித்தது. தொடா்ந்து, சாரல் மழை பெய்து வருகிறது.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு மணி நேரத்தில் 70 மி.மீ. அளவுக்கு மழை பதிவானது. இதனால் நகரம், கிராமப்புறங்களில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கனமழை காரணமாக புதுச்சேரியில் புஸ்ஸி வீதி, ரெயின்போ நகா், இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி, மேடான பகுதிகளிலும் மழை வெள்ளம் வழிந்தோடியது. குறிப்பாக, சண்முகாபுரம் பகுதிகளில்ல் மழை நீா் வெள்ளம் போல் சாலையில் ஓடியது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

சூறைகாற்று காரணமாக, புதுச்சேரி- வழுதாவூா் சாலை வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினா் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT