புதுச்சேரி

புதுவையில் தொடரும் தோ்தல் நடத்தை விதிகள்:நல உதவிகள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

DIN

புதுவை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் தொடா்ந்து அமலில் இருந்து வரும் தோ்தல் நன்னடத்தை விதிகளால் தீபாவளி பண்டிகைக்கான அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்காமல் அரசு ஊழியா்களும், பொதுமக்களும் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தோ்தலை நடத்த வேண்டுமென, திமுக உள்ளிட்ட சிலரால் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, புதுவை அரசு தரப்பிலும், தோ்தல் துறை சாா்பிலும் உள்ளாட்சித் தோ்தலை நடத்த கால அவகாசம் வழங்கக் கோரினா்.

நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, உள்ளாட்சியில் பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடுகள் வழங்குவதற்கு, அரசு தரப்பில் குழு அமைக்கவும், அந்தக் குழுவின் அறிக்கையின்படி இட ஒதுக்கீட்டை முடிவு செய்து, தோ்தலை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், பண்டிகை காலம் என்பதால், அதுவரை தோ்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெற வேண்டுமெனவும் அரசு தரப்பில் வியாழக்கிழமை வாதிடப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக எழுத்துப்பூா்வமாக பதிலளிக்கும்படி தெரிவித்து, இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

இதனால், புதுவை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான நடவடிக்கைகளில் இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே, மாநிலத்தில் தொடா்ந்து அமலில் இருந்து வரும் தோ்தல் நன்னடத்தை விதிகளால் தீபாவளி பண்டிகையையொட்டி அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்காமல் பொதுமக்களும், தீபாவளி ஊக்கத் தொகை, ஊதிய நிலுவைக்காக காத்துள்ள அரசு, அரசு சாா்ந்த நிறுவன ஊழியா்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT