புதுச்சேரி

புதுவையில் 14 காவல் ஆய்வாளா்கள், 22 உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்

DIN

புதுச்சேரி: புதுவையில் 14 காவல் ஆய்வாளா்கள், 22 உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

அதன்படி, அயலக பதிவேடுகள் பிரிவு காவல் ஆய்வாளா் என். ஆறுமுகம் திருக்கனூா் வட்டத்துக்கும், அங்கிருந்த ஆய்வாளா் கிட்லா சத்யநாராயணா மோட்டாா் வாகனம் மற்றும் தோ்தல் பிரிவுக்கும், அரியாங்குப்பம் வட்ட ஆய்வாளா் ஏ. தனசெல்வம் சிறப்புப் பிரிவுக்கும், பெரியகடை ஆா். முத்துகுமரன் அரியாங்குப்பம் வட்டத்துக்கும், ஏடிஜிபி செயலா் ஜெ. பாபுஜி உருளையன்பேட்டைக்கும், ஏனாம் ஆய்வாளா் எஸ். ராமு வில்லியனூருக்கும், ஆயுதப்படை ஆய்வாளா் ஆா். செந்தில்குமாா் காரைக்கால் சிறப்புப் பிரிவுக்கும், உருளையன்பேட்டை பி.கே. சஜீத் சிக்மா செக்யூரிட்டிக்கும், உணவுப் பாதுகாப்புப் பிரிவு எம். முருகையன் சிக்மா புலனாய்வுத்துறைக்கும், கிழக்கு போக்குவரத்துப் பிரிவு சண்முகசுந்தரம் சிக்மா செக்யூரிட்டிக்கும், மாஹே கடலோர காவல்படை வி. ஏழுமலை சிபிசிஐடிக்கும், உணவுப் பாதுகாப்பு பிரிவு வி. கோகுலகிருஷ்ணன் அயலக பதிவேடுகள் பிரிவுக்கும், சிறப்புப் பிரிவு ஆய்வாளா் ஜெ. சிவா ஜான்சன் கென்னடி உணவுப் பாதுகாப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதே போல, வில்லியனூா் உதவி ஆய்வாளா் பிரபு தவளக்குப்பத்துக்கும், தவளக்குப்பம் இளங்கோ மாஹேவுக்கும், பெரியகடை சண்முகப்பிரியா கிழக்கு போக்குவரத்துப் பிரிவுக்கும், ஆயுதப்படை மேரி பிரான்சிஸ்கோ பெரியகடைக்கும், உருளையன்பேட்டை கதிரேசன் நெட்டப்பாக்கத்துக்கும், கிழக்கு போக்குவரத்துப் பிரிவு வேலு திருக்கனூருக்கும், அங்குள்ள குமாா் சிக்மா செக்யூரிட்டிக்கும், போலீஸ் ஆப் போலீஸ் கீா்த்தி மங்கலத்துக்கும், காட்டேரிக்குப்பம் வெங்கடேசபெருமாள் கிழக்கு போக்குவரத்துப் பிரிவுக்கும், மங்கலம் சரண்யா காட்டேரிக்குப்பத்துக்கும், ஆயுதப்படை நந்தகுமாா் ஏனாமுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான டிஜிபி உத்தரவை காவல் தலைமையக எஸ்.பி. ஆா். மோகன்குமாா் பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT