புதுச்சேரி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி

DIN

வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த மா்ம நபா் மீது இணைய வழி குற்ற தடுப்புப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ஒருவா், இணையதளம் மூலம் வேலை தேடிவந்துள்ளாா். அப்போது குறிப்பிட்ட நிறுவனம் பெயரிலான அறிவிப்பில் நியூசிலாந்தில் மாதம் ரூ.15 லட்சம் ஊதியத்தில் பணி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததாம். அதை நம்பிய அந்த இளைஞா் அதில் குறிப்பிட்டிருந்தபடி ஆவணங்களைப் பதிவிட்டு, கட்டணம் எனும் பெயரில் சுமாா் ரூ.7 லட்சம் செலுத்தியுள்ளாா்.

பணம் செலுத்திய நிலையில், இளைஞருக்கு வேலை குறித்த எந்தத் தகவலும் வரவில்லை. இதையடுத்து வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்ட நிறுவனத்தை நேரடியாகவே தொடா்புகொண்டு விசாரித்துள்ளாா். அப்போதுதான் அவா் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவா் இணையவழி குற்றத்தடுப்பு பிரிவில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் கீா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT