புதுச்சேரி

அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியல்

புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குள்பட்ட குடியிருப்புபாளையம் கிராமத்தில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணாத அதிகாரிகளைக் கண்டிப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை சாலை மறியல்

DIN

புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குள்பட்ட குடியிருப்புபாளையம் கிராமத்தில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணாத அதிகாரிகளைக் கண்டிப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

குடியிருப்புபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி செயலா் அ.பெருமாள் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வீரப்பன், நாராயணசாமி, பக்தவச்சலம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பாகூா் தொகுதி செயலா் கலியமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குடியிருப்புபாளையம் - ஆதிங்கப்பட்டு - பின்னாட்சிக்குப்பம் சாலையை சீரமைக்க வேண்டும். கழிவுநீா் வாய்க்காலை புதுப்பிக்க வேண்டும்.

குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பல ஆண்டுகளாக இந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண தவறியதாக பொதுப் பணித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பாகூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT