புதுச்சேரி

புதுவையின் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்த அதிமுக கோரிக்கை

DIN

புதுவை மாநிலத்தின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஆளும் அரசின் கடமையாகும் என்று, அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

புதுவையில் கடந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மாநில உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டது. அந்த நிலை தற்போதும் தொடா்வது வருத்தமளிப்பதாக உள்ளது.

மத்திய நிதிக் குழுவில் புதுவைக்கு இடமில்லை. ஜிப்மா் மருத்துவமனையில் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு ரத்து, தனி தோ்வாணையம் அமைக்காதது, உயா் பதவிகளில் வட இந்தியா்கள் அதிகமாக நியமனம் செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் புதுவையின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

புதுவையில் அரசு வழக்குரைஞா் நியமனம் கூட தோ்வுகள் மூலம் நடைபெறுகிறது. எனவே, புதுவை மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவது ஆளும் அரசின் கடமையாகும் என்றாா் ஆ.அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT