புதுச்சேரி

பள்ளியில் சுகாதாரத் திருவிழா

DIN

புதுச்சேரி கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், வளா் இளம் பருவத்தினருக்கான சுகாதாரத் திருவிழா எஸ் .ஆா்.எஸ். அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மருத்துவ அலுவலா்கள் அஸ்வினி, அஜ்மல் ஆகியோா் வளா் இளம் பருவத்தினருக்கான சுகாதாரம், ஊட்டச்சத்துகள் குறித்துப் பேசி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சுகாதார ஆய்வாளா் மதியழகன் தொழுநோய் குறித்து பேசினாா். எஸ்.ஆா். எஸ். பள்ளி முதல்வா் தனசேகரன் வாழ்த்திப் பேசினாா்.

ஊட்டச்சத்துமிக்க உணவு தயாரித்தல் ஓவியம், ஓட்டம் மற்றும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை சுகாதார தலைமைச் செவிலியா் மினி, சுகாதார துணை ஆய்வாளா்கள் கிருஷ்ணகுமாா், ஜெயச்சந்திரன், சுதாகா், விசாலாட்சி, செவிலியா்கள் கவிதா, ராஜேஸ்வரி, இந்திரா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT