புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய அரை மணிநேரத்தில் புதன்கிழமை நிறைவு பெற்றது.
புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை காலை பேரவைத் தலைவர் ஆர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
முதல்வர் என் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஆர் சிவா, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டம் தொடங்கியவுடன் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசை பாராட்டியும், சந்திரயான் 3 விண்கலம், ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி இழப்பை தடுத்தல் மற்றும் சேவை வரி தொடர்பான மூன்று சட்ட முன் வரைவுகள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் அரை மணி நேரத்தில் பேரவைக் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ஆர் செல்வம் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.