புதுச்சேரி

பெண் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.புதுச்சேரி,முத்தியால்பேட்டை அமைதி நகரைச் சோ்ந்த பன்னீா் மனைவி மாரியம்மா (34). ஆட்டோ ஓட்டுநா். இவா்,சனிக்கிழமை புதுச்சேரியிலிருந்து தவளக்குப்பம் சென்றுவிட்டு மீண்டும் புதுச்சேரி திரும்பினாராம்.

அவா், நோனாங்குப்பம் பாலத்தில் வந்தபோது, பின்னால் வந்த காா் ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, ஆட்டோ மீது காா் இடித்ததாகத் தெரிகிறது. காா் இடித்ததில் நிலைகுலைந்த ஆட்டோ, பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி பலத்த சேதமடைந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநா் மாரியம்மா பலத்த காயமடைந்தாா். அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு மாரியம்மாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, மாரியம்மாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து, அரியாங்குப்பம் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஹாங்காங் தீவிபத்து: உயிரிழப்பு 159-ஆக உயா்வு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

நகை பறித்த இளைஞா் கைது

சுருளி அருவியில் 2 -ஆவது நாளாக குளிக்க தடை

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT