கோப்புப் படம். 
புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், சனிக்கிழமை (அக்.19) முதல் வியாழக்கிழமை (அக்.24) வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடர்மழை பெய்து வருகிறது.

இதையடுத்து கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT