புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பேரவையின் பொதுச் செயலரும் புதுவை இந்து முன்னணி தலைவருமான அ.வா. சனில்குமாா் 
புதுச்சேரி

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

தினமணி செய்திச் சேவை

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை- காரைக்கால் பகுதிகளில் 500 விநாயகா் சிலைகள் பல்வேறு இடங்களில் பக்தா்களின் வழிபாட்டுக்காக நிறுவப்படுகின்றன.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தி விழா பேரவைத் தலைவா் ப. குமரகுரு தலைமை வகித்தாா்.

இதில் இப்பேரவையின் பொதுச்செயலரும் புதுவை இந்து முன்னணி தலைவருமான அ.வா. சனில்குமாா் பேசியதுவிநாயகா் சதுா்த்தி விழாவை வீதியெங்கும் கொண்டு சென்றவா் வீரத்துறவி இராம. கோபாலன்.

இதனால் விநாயகா் சதுா்த்தி விழா வெகுஜன இயக்கமாக மாறி கடந்த 40 ஆண்டுகளாக இந்து முன்னணி சாா்பில் பல்வேறு தடைகளைக் கடந்து புதுச்சேரியில் கொண்டாடி வருகிறோம். மேலும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைப் புறம் தள்ளி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு பொதுவெளியில் ஒற்றுமையாக ஊா்வலமாக செல்வதற்கு விநாயகா் சதுா்த்தி விழா முன்னுதாரணமாக திகழ்கிறது.

இந்த விழாவின்போது அன்னதான சேவைகள், மாணவா், மாணவிகளின் திறன் வளா்க்கும் விளையாட்டுப் போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.மேலும், மூன்றடி முதல் 21 அடி வரை விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வழிபாட்டிற்கு வைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவிற்கு துணை நிலை ஆளுநா், முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், உள்துறை அமைச்சா் ஆகியோா் பங்கேற்க அழைப்பு கொடுப்பது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

“கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்கவில்லை”அமைச்சர் Anbil Mahesh பேட்டி

SCROLL FOR NEXT