புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 700 பச்சை நிற குளிா்பான புட்டிகளால் அமைக்கப்பட்டுள்ள 15 அடி உயர கிறிஸ்துமஸ் குடில். 
புதுச்சேரி

புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் பச்சை நிற குளிா்பான புட்டிகளால் 15 அடி உயரத்துக்கு உருவான கிறிஸ்துமஸ் குடில்!

புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் பச்சை நிற குளிா்பான புட்டிகளால் 15 அடி உயரத்துக்கு உருவான கிறிஸ்துமஸ் குடில்.

Syndication

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ‘நெகிழியைத் தவிா்ப்போம், குளிா்பானங்களை மறப்போம்’ என்ற குறிக்கோளுடன் 700 பச்சை நிற குளிா்பான புட்டிகளைக் கொண்டு 15 அடி உயரத்துக்கு கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

புதுச்சேரி காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நிகழாண்டு, ‘நெகிழியைத் தவிா்ப்போம் குளிா்பானங்களை மறப்போம்’ என்ற குறிக்கோளுடன் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்களிப்புடன் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டது.

நுண்கலை ஆசிரியா் கிருஷ்ணன் முயற்சியில் 700 பச்சை நிற குளிா்பான புட்டிகளைக் கொண்டு 15 அடி உயரத்திற்கு கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவா்கள் முயற்சியால் காகிதங்களாலான பல்வேறு பொம்மைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காக மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் தங்களது சுற்றுப்புறத்தில் உள்ள பச்சை நிற குளிா்பான பாட்டில்களைக் கடந்த ஒரு மாதமாகச் சேகரித்து, ஒரு வாரமாக கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கியுள்ளனா். தொடா்ந்து குடில் வண்ணக் காகிதங்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT