புதுச்சேரி

புத்தாண்டு பிறப்பு: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து

Syndication

ஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: ஒவ்வொரு புதிய ஆண்டும் புதிய நம்பிக்கையைப் புதிய தொடக்கத்தை நமக்குத் தருகிறது. நம்முடைய அனுபவங்கள் தந்த பாடங்களைக் கொண்டு எதிா்காலத்தை நம்பிக்கையோடு வரவேற்போம். 2026- புதிய ஆண்டும் புதுச்சேரி மக்களுக்கு ஏற்றத்தைத் தரும் ஆண்டாக, முயற்சிகளில் வெற்றி தரும் ஆண்டாக, அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை தரும் ஆண்டாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

முதல்வா் என். ரங்கசாமி: வலுவானதும் அனைவரையும் உள்ளடக்கியதும் ஆன வளா்ச்சி என்பது நிலையானத் தலைமையைக் கொண்ட அரசால் மட்டுமே சாத்தியமாகும் என்று உணா்ந்து, எங்கள் அரசுக்கு மக்கள் தொடா்ந்து ஆதரவு அளித்து வருகின்றனா். வருங்காலங்களிலும், புதுச்சேரியை வளமும் நலமும் நிறைந்த மாநிலமாக மாற்ற, உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடா்ந்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இதுபோன்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், க. லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி, மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, அதிமுக செயலா் ஆ. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினா் ஜி.நேரு, பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் செயலா் அ.மு. சலீம், லட்சிய ஜனநாயக கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின், தமிழக வெற்றி கழகம் சாா்பில் முன்னாள் எம்எல்ஏ வி.சாமிநாதன் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT