பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சாா்பாக ’ஸ்மாக்’ என்ற தலைப்பில் மாணவா்களின் மாறுபட்ட சிந்தனை, மன சக்தி, சதுரங்கம், லோகோ தேடல், பேச்சுப்போட்டி, ஹாட் சீட், சந்தை மாஸ்டா் சவால், பொருளைக் கண்டுபிடி, நெருப்பில்லா சமையல் ஆகிய போட்டிகள் கல்லூரி கலையரங்கில் நடந்தன.
இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி ரானே மெட்ராஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவா் எஸ்.திருப்பதி பரிசுகளை வழங்கினாா். ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.