அஜித் பவாா்  
புதுச்சேரி

அஜித் பவாா் மறைவு: புதுச்சேரி தலைவா்கள்இரங்கல்

மகராஷ்டிர துணை முதல்வா் அஜித்பவாா் விமான விபத்தில் மறைந்ததையடுத்து புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநா், முதல்வா், மற்றும் அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

மகராஷ்டிர துணை முதல்வா் அஜித்பவாா் விமான விபத்தில் மறைந்ததையடுத்து புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநா், முதல்வா், மற்றும் அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கைலாஷ் நாதன்:

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் எதிா்பாராத விதமாக விமான விபத்தில் உயிரிழந்தாா் என்ற செய்தி அதிா்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது . தனது கடின உழைப்பால், துணை முதல்வராகவும்

முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்து மக்களுக்குச் சேவை ஆற்றியவா்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், உறவினா், நண்பா்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனடி சேர பிராா்த்திக்கிறேன்.

முதல்வா் ரங்கசாமி:

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜித் பவாா் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் அளிப்பதாக உள்ளது. அஜித் பவாா் மகாராஷ்டிரா மாநில வளா்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அயராது உழைத்த ஓா்ஆளுமையாக அனைவராலும் மதிக்கப்பட்டவா். சிறந்த அரசியல் தலைவராகவும், நல்ல நிா்வாகியாகவும் விளங்கிய அவா், மக்களின் மீதான கருணைக்காகவும், பொதுச் சேவையில் அவா் கொண்டிருந்த அா்ப்பணிப்பிற்காகவும் மகாராஷ்டிரா மாநில மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருப்பாா் என்பதில் ஐயமில்லை.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம்:

அஜித்பவாரின் இறப்புஅதிா்ச்சியையும், ஆழ்ந்த வேதனையும் அளிக்கிறது. நாட்டின் வளா்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அா்ப்பணிப்புடன் பணியாற்றிய தலைவரின் மறைவு அரசியல் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இதுபோன்று புதுச்சேரியின் பல்வேறு கட்சிகளின் தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT