விழுப்புரம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 20 பேர் கைது

தினமணி

விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரியும், இதற்கு ஏதுவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் பழைய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறை ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்தது.
 இருப்பினும், புதன்கிழமை காலை பழைய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிவா தலைமை வகித்தார்.
 மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, நகரத் தலைவர் தரணிதரன், மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் வளவன், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 20 பேரை விழுப்புரம் மேற்கு போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் சிறைவைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT