விழுப்புரம்

திண்டிவனம் அருகே மினி வேன் கவிழ்ந்து இரு பெண்கள் சாவு

தினமணி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
 திண்டிவனம் அருகேயுள்ள வைரம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 19 பேர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு, மினி வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 தென்களவாய் அருகே வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
 இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த விஜயகுமாரின் மனைவி கோமதி(36), கமலக்கண்ணனின் மனைவி வெள்ளியம்மாள் (60) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
 ஆதிமூலம் மகன் பார்த்திபன் (48), குப்பம்மாள் (65), சிவகாமி(38), மினி வேன் ஓட்டுநரான ராமஜெயம் மகன் பார்த்திபன்(24) ஆகியோர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 விபத்து குறித்து மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT