விழுப்புரம்

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தினமணி

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.
 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ, பி.எஸ்சி., பி.காம். பி.சி.ஏ. ஆகிய பிரிவுகளில் 10-க்கும் மேற்பட்ட இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
 இந்த இளநிலைப் படிப்புகளில் 2017-18-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 12 முதல் மே 25 வரை வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மொத்தம் 8,100 விண்ணப்பங்கள் விற்பனையாயின.
 மே 25 மாலை வரை கல்லூரிக்கு 7 ஆயிரம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதனையடுத்து, தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
 இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 5) தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
 முதல் நாளான 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து, திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பி.ஏ. ஆங்கிலப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் (பொ) அம்பலவாணன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT