விழுப்புரம்

மது கடத்தல்: இருவர் கைது

DIN

புதுவையிலிருந்து வேனில் மதுப் புட்டிகள், எரி சாராயம் கடத்தியதாக இருவரை விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில், புதுவை மாநில மதுப் புட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. வேனில், 35 அட்டைப் பெட்டிகளில் 1,680 மதுப் புட்டிகளும், 35 லிட்டர் எரி சாராயமும் இருந்தது.
இதையடுத்து, மதுப் புட்டிகளை கடத்தி வந்தவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கள்ளக்குறிச்சி அண்ணாசாலை நகரைச் சேர்ந்த வைரமுத்து மகன் கார்த்திகேயன்(36), புதுவை முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த முகமதுஎவசம் மகன் அப்துல்லா (26) என்பதும், இருவரும் புதுவையிலிருந்து, சென்னைக்கு மதுபானங்களைக் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, கார்த்திகேயன், அப்துல்லா இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் மற்றும் வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT