விழுப்புரம்

பள்ளியில் கால்பந்துப் போட்டி

DIN

திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியில் ராயல் யுனியன் கிளப், திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் ஆகியவை சார்பில் கால்பந்துப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வர் ராமு முன்னிலை வகித்தார். பள்ளி நிறுவனர் எஸ்.முரளி (எ)ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட அரிமா தலைவர் தருமசிவம், பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் தெய்வமணி, ராயல் கிளப் செயலர் ராஜி, பொருளாளர் ஹரிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வானூர் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சிவா கால்பந்துப் போட்டியைத் தொடக்கிவைத்தார். இந்த போட்டியில் திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, மரக்காணம், முகையூர், கண்டாச்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் முதல் இடம் பெறும் அணிக்கு ரூ. 7 ஆயிரமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ. 5 ஆயிரமும், மூன்றாமிடம் பெறும் அணிக்கு ரூ. 4 ஆயிரமும் நான்காமிடம் பெறும் அணக்கு ரூ. 3 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகளை உடற்கல்வி இயக்குநரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான பிரான்சிஸ் ஒருங்கிணைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT