பதாகைகள் அகற்றம்: விசிகவினர் மறியல்
வளவனூர் அருகே சிறுவந்தாடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வளவனூர் அருகே சிறுவந்தாடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிறுவந்தாடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் பதாகைகளை திங்கள்கிழமை இரவு போலீஸார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ராம்பாக்கம் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வளவனூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிகழ்ச்சி நாள் முடிந்த பிறகும் அகற்றப்படாத பதாகைகளால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து அபாயம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் மாவட்டம் முழுவதும் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படியே, சிறுவந்தாடு பகுதியிலும் பதாகைகள் அகற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸாரின் இந்த சமாதானத்தை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.
மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.