விழுப்புரம்

சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் மறியல் 

தினமணி

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 வழுதரெட்டி பகுதியில் உள்ள அம்பேத்கர் காலனியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாள்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. சில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதுதொடர்பாக அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
 இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீஸார் மற்றும் நகர சுகாதாரத் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கழிவுநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT