விழுப்புரம்

தேசிய இளைஞர் தின விழா

தினமணி

விழுப்புரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் ராமகிருஷ்ணா கல்விக்குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்விக்குழுமச் செயலாளர் கே.பழனிவேல் வரவேற்றார்.
 பள்ளி முதல்வர் ஆர்.பாட்சா தலைமை வகித்தார். சாலாமேடு ராமகிருஷ்ணா பள்ளி முதல்வர் கே.பெரியதுரை தொடக்க உரையாற்றினார் .
 பெங்களூரு அல்சூரைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி வீத்தபயானந்தாஜி மகராஜ், வாரனாசி ராமகிருஷ்ணா மிஷன் சேவை இல்ல நிர்வாகி ஸ்ரீமத் சுவாமி பிரமுக்தானந்தாஜி மகராஜ், சென்னை டி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமி பத்மஸ்தானந்தாஜி மகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று ஆசியுரை வழங்கினர்.
 தொடர்ந்து, மாணவர்களின் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்களுக்கு இளைஞர் தின போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 ராமகிருஷ்ணா பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT