ஆண் குழந்தை சடலம் மீட்பு
ரிஷிவந்தியம் அருகே பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ரிஷிவந்தியம் அருகே பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ரிஷிவந்தியத்தை அடுத்த அரியலூர் கிராமத்தில் உள்ள பார்வதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராணி என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது.
சில மாதங்களாகவே பூட்டியே கிடக்கும் இந்த வீட்டின் முன்பக்கத்தில், பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை உடல் அழுகிய நிலையில் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸார் உடலை மீட்டு, உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.