முகப்பு
விழுப்புரம்

மாவட்ட நூலகத்தில் குரூப் -2 மாதிரி தேர்வு

விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை குரூப்- 2 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு நடைபெற்றது.

Updated On : 5 நவம்பர் 2018, 9:21 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை குரூப்- 2 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு நடைபெற்றது.
 விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
 இங்கு, குரூப்-2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
 இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நவம்பர் 11-ஆம் தேதி, குரூப்-2 போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
 இதனையொட்டி, மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாதிரித் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
 முதல்கட்டமாக, பொது நுலகத் துறையும், தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியும் இணைந்து குரூப் -2 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வை கடந்த மாதம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.4) நடைபெற்றது.
 இதில், 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
 தேர்வினை நூலகர்கள் இளஞ்செழியன், முருகன், ஊர்புற நூலகர் சங்கர் ஆகியோர் கண்காணித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments