விழுப்புரம்

1,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

DIN

கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் திங்கள்கிழமை மேற்கொண்ட சாராய ஒழிப்பு வேட்டையில் 1,400 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன் தலைமையில் கல்வராயன்மலை காவல் உதவி ஆய்வாளர் கிள்ளிவளவன், கச்சிராயப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உப்பூர் பகுதியில் திங்கள்கிழமை தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வாரம் பகுதியில் 5 பேரல்களில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலைக் கண்டு பிடித்து அழித்தனர். தலைமறைவான அதே கிராமத்தைச் சேர்ந்த பிச்சன் மகன் சந்திரபாபுவை தேடி வருகின்றனர்.
அதே போல, சேத்தூர் ஓடைப் பகுதியில் 4 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊறலைக் கண்டு பிடித்து அழித்து அதே கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தன் மகன் பழனிசாமியை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT