விழுப்புரம்

அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

தினமணி

விழுப்புரம் அருகே சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்குக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
 பள்ளித் தலைமை ஆசிரியர் அருணகிரி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் நாகராஜன் வரவேற்றார். முகையூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரஜேஷ் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், தடுப்பு முறைகள் குறித்து பேசினார்.
 வட்டார சுகாதார அலுவலர் ராஜாராம் கலந்துகொண்டு பன்றிக் காய்ச்சல் தடுப்பு, கை கழுவும் முறை, சுகாதாரம் பேணுதல் குறித்து விளக்கிப் பேசினார். மாணவி ஷர்ஷா, மாணவர் சுரேந்திரன் ஆகியோர் கை கழுவும் முறை, டெங்கு பரவும் முறைகள் குறித்து கருத்துரைகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT