விழுப்புரம்

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

DIN

விழுப்புரம் அருகேயுள்ள சாலாமேடு கிராமத்தில் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
ராமகிருஷ்ணா கல்விக் குழுவின் பொருளாளர் லோகையன் முகாமைத் தொடக்கி வைத்தார். கல்விக் குழுச் செயலாளர் பழனிவேலு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பாட்சா வரவேற்றார்.
முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் சூரியநாராயணன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த முகாமில் மரக்கன்று நடுதல், கோயில் உழவாரப் பணி, பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்கள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டது.
நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் வேல்முருகன் தொகுத்து வழங்கினார். நாட்டு நலப் பணி திட்ட உதவி அலுவலர் கண்ணபிரான் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT